செம்பருத்தி ஜூஸ்

8 comments

வலையுலக உறவுகளுக்கு அன்பான வணக்கம்...! நீ.........ண்ட  இடைவெளிக்கு பின் ஒரு குளுமையான பதிவு...:) கோடை முடிந்தாலும் அதன் தாக்கம் தொடர்கிறது. இயற்கையான முறையில் நம் உடலை ஆரோக்கியமாக குளுமையாக வைத்து கொள்ள உதவும் மிக சிறந்த பானம் இந்த பதிவில் பதிவிடுகிறேன். இந்த சர்பத்தில் நம் ரத்தத்தின் சிவப்பு அணுக்களை அதிகரிக்கும் திறனும்  எதிர்ப்பு சக்தியும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த நல்ல பானம் ..( லேட்டா பதிவை கொடுத்து பீடிகை வேறயா ...உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது...:)) அதாங்க செம்பருத்தி ஜூஸ்...!

தேவையான பொருட்கள்:-

 1. செம்பருத்தி பூ             -   5
 2. சர்க்கரை                      -  தேவையான அளவு 
 3. எலுமிசசை                  - 1பழம் 
 4. ஐஸ் க்யூப்ஸ்               - 5

செய்முறை:-

 1. செம்பருத்தியை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி ஒரு பாத்திரத்தில் போட்டு 4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
 2. கொதித்த தண்ணீரை மறறொரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவேண்டும்.வடிகட்டிய நீர் மெரூன் நிறத்தில் இருக்கும்.
 3. வடிகட்டிய நீருடன் எலுமிசசையை பிழிந்து சர்க்கரை சேர்த்து கரைத்தால் ரத்த சிவப்புடன் ஜூஸ் தயார்.

எளிமையான ஜூஸ் .... நீங்களும் முயன்று பாருங்கள்.

8 comments:

 1. ஆஹா! பார்க்கவே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது..
  கடத்தி வர, தெரிந்த எவர் வீட்டிலும் இந்தச் செம்பருத்தி இல்லை. ;(

  ReplyDelete
 2. வருகைக்கு மிக்க நன்றி இமா...:) ஆக்லாண்ட்டில் செம்பருத்திக்கு பஞ்சமா....!

  ReplyDelete
  Replies
  1. இல்லை. இது பூக்கும் காலம் தான். ஆனால் வேறு நிறங்களிலுள்ளவைதான் பெரும்பாலும் கிடைக்கும். இந்த ஒற்றைச் சிவப்பு அபூர்வமாகத் தான் கண்டிருக்கிறேன்.

   Delete
 3. ராதா ராணி நலமா?
  செம்பருத்தி இலைகள் மட்டும் போட்டு செய்ய வேண்டும் தானே?
  நான் செய்து குடித்து இருக்கிறேன். சுவையான சர்பத்.சூடாய் பருகினால் செம்பருத்தி டீ.
  படம் அழகு.

  ReplyDelete
 4. நலம் அக்கா...:) பூவின் இதழ்களை கொதிக்க வைத்து சர்பத் செயதேன் . வருகைக்கு மிக்க நன்றி அக்கா...:)

  ReplyDelete
 5. Looks vibrant..but I can't Drink! Hehe he!! 😜

  ReplyDelete
 6. Thankyou very much for ur comment Mahi..:)

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)