ரகடா பேட்டீஸ்

12 comments
வடஇந்திய உணவு வகைகளில் ஒன்றான ரகடா பேட்டீஸ் இனிப்பும் புளிப்பும்மான ஒரு சிற்றுண்டி .. உருளையில் செய்ய கூடிய  இது வெஜ் பேட்டீஸ் ஆக சிக்கன் பேட்டீஸ் ஆக கீரை வகைகள் சேர்த்து செய்யும் பேட்டீஸாக செய்யலாம்.பட்டாணியில் செய்யும் ரகடாவை பேட்டீஸ் உடன் சேர்த்து சாப்பிடும்போது இனிப்பும் புளிப்பும்மாக மாலைநேர சிற்றுண்டிக்கு பொருத்தமாக இருக்கும்.

பேட்டீஸ்:-

தேவையான பொருட்கள் :-
  • உருளை கிழங்கு                 - கால் கிலோ
  • பிரட்                                          - 3 சிலைஸ்
  • பூண்டு                                     - சிறிது
  • காரன் ப்ளார்                         - 4 டீ ஷ்பூன்
  • உப்பு                                         - சிறிது
  • மிளகாய் பொடி                  - அரை ஸ்பூன்
செய்முறை:-
  • உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து ரெடியாக வைக்கவும்.
  • பிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் உருளையை நன்றாக மசித்து வைக்கவும்.
  • அதனுடன் பிரட்,பொடியாக நறுக்கிய பூண்டு, கார்ன் ப்ளார் , மிளகாய் பொடி, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.
  • அடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொரு மொறுப்பாக சிவந்த வுடன் எடுத்து வைக்கவும்.
  • பேட்டீஸ் தயார்.

ரகடா:-

தேவையான பொருட்கள் :-
  • பட்டாணி    - ஒரு கப்
  • பல்லாரி                           - ஒன்று (பெரியது)
  • மசால் பொடி                  - 2 ஸ்பூன்
  • டொமாட்டோ சாஸ்   - சிறிது
  • லெமன் ஜூஸ்              - அரை ஸ்பூன்
  • மிளகாய் பொடி            - அரை ஸ்பூன்
  • உப்பு                                  - சிறிது
  • சர்க்கரை                        - அரை ஸ்பூன்
  • இஞ்சி                              - சிறு துண்டு
  • பூண்டு                            - 4இதழ்கள்
  • மல்லித்தழை               -சிறிது
செய்முறை:-
  • பட்டாணியை குக்கரில் வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து  கொள்ள வேண்டும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.
  • மசால் பொடி, மிளகாய் பொடியை வெங்காயத்தில் சேர்த்து 2 நிமிடம் வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.
  • மிக்சியில் இஞ்சி,பூண்டு, வெங்காயம், மீதியுள்ள பட்டாணி, மல்லி தழை சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.
  • இறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து மல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.
இது எங்க வீட்டு செல்லம் ஸ்கூபி... 10 நாள் குட்டியாக இருந்த போது...

இப்போது 2 மாத குட்டியாக...

12 comments:

  1. படங்களும் செய்முறையும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றியண்ணா.

      Delete
  2. Scooby is cute!! :)

    Will come again for ragada patties latter!

    ReplyDelete
  3. //எங்க வீட்டு செல்லம் ஸ்கூபி... 10 நாள் குட்டியாக இருந்த போது...// அதாவது, உங்க வீட்டுக்கு ஸ்கூபி வந்து 10நாட்கள் ஆனபோது, ரைட்?! :) பிறந்த நாய்க்குட்டிகள் கண்ணு முழிக்கவே 15 ஆகுமே! ;) :)

    அழகா பொம்மை வைச்சு விளையாடறார்! மங்கி பொம்மை, ஸ்மைலி பொம்மை ரெண்டுமே ஸ்கூபியோட சேர்ந்ததால் இன்னும் அழகா இருக்கு! :)

    பப்பீஸ் எப்பப் பார்த்தாலும் அழகுதான்! ஆனாலும் குட்டியா இருக்கும்போது அந்த முகத்தில இருக்க இன்னொஸன்ஸ், அதுங்க நடக்கும்போது நாலு திசைக்கும் போகும் நாலு கால்கள் அப்படின்னு ஒரு ஸ்பெஷல் அழகா இருக்கு. பொமரேனியன் வகையா இவரு? என்ஜாய் பண்ணுங்க!

    பி.கு. ஸ்கூபி இந்த போஸ்ட்டை அலேக்-கா சாப்ட்டுட்டதால ரகடா பட்டீஸ் பின்னால போயிருச்சு! ஹிஹி..நல்லா இருக்குங்க ரெசிப்பி! நான் செய்யணும்னு பலநாளா நினைக்கிறேன், ஆனா இன்னும் பெண்டிங்-ல தான் இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. ஆமா மகி... கண் முழிக்க 15 நாள் ஆகும்.இவர் இங்க வரும் போது தட்டித் தடுமாறி எங்கேயாவது முட்டிக் கொள்வார்.. பொம்மை மங்கி பொம்மை இல்லை மகி..சிங்க பொம்மை. இவர் பொமரேனியன் வகைதான். ஸ்கூபி உங்களை அதிகமாக ஈர்த்ததில் சந்தோஷம். வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
    2. சீக்கிரம் ரகடா பேட்டீஸ் குறிப்பை போடுங்க.. உங்க செய்முறை எப்பிடின்னு தெரிந்து கொள்ள ஆவலா இருக்கேன்..:)

      Delete
  4. உடனே சாப்பிட வேண்டும் போலுள்ளது... அருமை... செய்முறை குறிப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  5. ஊக்கத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..:)

    ReplyDelete
  6. என்னையும் ஸ்கூபிதான் அதிகம் ஈர்த்தார். அழகு குட்டி.

    ReplyDelete
    Replies
    1. அழகோடு மிகுந்த புத்திசாலி குட்டி.. உங்களோட ட்ரிக்க்ஷி எப்படி இருக்கார்.. வருகைக்கு நன்றி இமா..

      Delete
  7. ரகடா, பற்றீஸ், ஸ்கூபி எல்லாமே சூப்பர்!...

    அதிலே எனக்கும் ஸ்கூப்பியே மத்த எல்லாத்தையும் முழுசா முழுங்கிட்டார்...:).
    அழகு குட்டி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வாங்க இளமதி..:) முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..! தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)