திருச்சுழியல் :-

12 comments
            பண்டை காலத்தில்  இருந்தே திருச்சுழி  ஒரு முக்கியமான  புண்ணிய  யாத்திரை தலமாகும்.திருச்சுழி ஒரு சிறிய கிராமம். மதுரையில் இருந்து 38 மைல் தொலைவில் உள்ளது. இவ் ஊரில்  ஸ்ரீ பூமி நாதராக சிவ பெருமான் அருள் புரியும் கோயிலானது, பழமைக்கு  பெயர்  பெற்றதாய்  பெரு மதிப்புடன் விளங்குகிறது. 3000 வருட பழமையுடன்  விளங்கும்  இக் கோயிலில் சகாய வல்லி  என்ற பெயருடன் விளங்கும்  சிவபெருமானின்  துணைவியாருக்கு  தனி சந்நிதி உண்டு. இவ்விரண்டு  தெய்வங்களுக்கும் உண்டான தமிழ்த்திருப்பெயர்கள் திருமேனிநாதர், துணைமாலையம்மன் என்பனவாகும்.

          பாடல் பெற்ற இத்தலத்தில் பக்தியில் சிறந்து விளங்கிய தமிழ் அருட் தொண்டர்களாகிய அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் வாகீசர்  ஆகியோர் இக்கோயிலுக்கு வருகை புரிந்திருக்கின்றனர். இறைவன் இறைவி, இருவர் மீதும் அற்புதமான அழியாப் புகழுடைய தமிழ்ப்பாடல்களை அவர்கள் இக் கோயிலில் இயற்றி அருளினார்கள்.



            இக்கோயில்  அமைந்த ஊருக்கு பெயர்க்காரணமும் உண்டு. பராந்தக சோழன் ஆட்சி செய்த காலத்தில் ஒருமுறை  வெள்ளம் வந்து நாடு முழுவதும் முழ்கும் அபாயம் வந்ததால் சோழன் இறைவனை நினைத்து வழிபட இறைவன் தன் திரிசூலத்தை கொண்டு ஒரே ஒரு முறை தாக்கத்தால் உருவான புனிதமான குளத்தில் நாட்டை  சூழ்ந்த வெள்ளம் இறைவன் கருணையினால் உருவான குளத்தில் ஒரு சுழி போல் தண்ணீர் முழுவதும் வடிந்து  நாடு காப்பாற்றப் பட்டதால் அவ்விடம் திருசுழியல் என்று பெயர் பெற்று காலப்போக்கில் திருச்சுழி என்று மருவிவிட்டது.இக்குளம் திரிசூழ தீர்த்தம் என்ற பெயருடன் விளங்குகிறது. இறைவனின் திரு விளையாடல் மாசி மாதம் பௌர்ணமிக்கு ஒருநாள் முன்னர் நடந்ததால் இன்றும் இக்குளத்தில் மாசி மாத பௌர்ணமிக்கு ஒரு நாள் முன்னர் குளத்தில் நீர் மட்டம் கணிசமான அளவு உயர்வது வழக்கம்.இப் புனித ஊரில் பிறந்த பகவான் ரமணர் இக் குளத்தின் சிறப்பை பற்றி கூறி இருக்கிறார். வருடத்தின் மற்ற நாட்களில் தண்ணீர் அவ்வளவு நன்றாக இருக்காது. மாசி மாதத்தில் மக நட்சத்திர தினத்தன்று தண்ணீர் பெருகி நீர் மட்டம் உயரும். சுவாமியின் அபிஷேகத்திருவிழா அன்றுதான்  அதாவது பிரம்மோற்சவத்தின் 10ம்  நாள் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு  திரி சூழதீர்த்தத்தின்  நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் முடிந்த பின் மக்கள் அனைவரும் அக்குளத்தில் நீராடுவர் என்று நினைவு  கூறுகிறார்.

 ரமணர் பிறந்த அறை 

ரமணரின் பெற்றோர் 

 ரமணர்

தியான மண்டபம் 

             இவ் ஊரில் ரமணர் அவதரித்த இல்லம் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது. இந்த இல்லம் ஸ்ரீ ரமணாஸ்ரமத்தால் பெறப்பட்டு  இன்று சுந்தர மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. ரமணருக்கென்று  விஷேச பூஜை ஒவ்வொரு நாளும் அவர் பிறந்த அறையில் நடை பெறுகிறது.
Read More...

க்ரிஸ்டல் ட்ராப்ஸ்

14 comments
தேவையான பொருட்கள் :-
  • வயர் கட்டர் 
  • கட்டிங் ப்ளேயர் 
  • கிரிஸ்டல் மணிகள் 
  • ஹூக் 
  • குண்டு பின் 
  • வயர் 

செய்முறை :-
வயர் கட்டரை கொண்டு வயரை தேவையான அளவு வெட்டி அதில் கிரிஸ்டல்  மணிகளை கோர்த்து ஹூக்கை வைத்து  ட்ராப்ஸ செய்து விடலாம்.. குண்டு பின்னில்  கிரிச்டலை கோர்த்து  ஹூக்கை  மாட்டி விட்டு கற்பனைக்கு ஏற்றவாறு  பல விதங்களில் ட்ராப்ஸ் செய்யலாம்.நான் செய்த சில மாடல்கள் உங்களின் பார்வைக்கு...

Read More...

வெண் பூசணி ரெய்தா

8 comments
தேவையான பொருட்கள்:-
  • வெண் பூசணி                                       - 250கிராம்
  • மாதுளை முத்துக்கள்                       - 1 கப்
  • மிளகாய் வத்தல்                                - 2
  • கருவேப்பிலை                                   - 2ஆர்க்கு
  • கடுகு                                                        - 1ஸ்பூன்
  • தயிர்                                                         - 1கப்
  • உப்பு                                                         - சிறிது
  • எண்ணெய்                                            - 1ஸ்பூன்
செய்முறை:-
  • பூசணி காயை  தோல் சீவி நறுக்கி கொண்டு சிறிது நீர் விட்டு வேக வைத்து  எடுத்து  கொள்ளவேண்டும்.
  • மாதுளையை வேக வைத்த பூசணியோடு  சேர்த்து உப்பு  போட்டு  கலந்து வைக்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து போட்டு வெடித்த உடன்  மிளகாய் வத்தலை கிள்ளி போட்டு கருவேப்பிலை சேர்த்து பூசணி, மாதுளை கலந்த கலவையில் கொட்ட வேண்டும்.
  • இறுதியாக ஒரு கப் தயிரை அதனுடன் கலந்து நன்றாக பிரட்டி விட்டால் வெண் பூசணி ரெய்தா தயார்.
  • ரத்த சோகைக்கு இதை சாப்பிட்டால் மிகவும் பலன் தரும்.
Read More...

சேப்பங்கிழங்கு வறுவல்

21 comments
தேவையான பொருட்கள்:-
  • சேப்பங்கிழங்கு                             - அரை கிலோ
  • சோம்பு                                              - 1 ஸ்பூன்
  • மிளகாய் பொடி                             - 1 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி                               - சிறிது
  • இஞ்சி                                               - சிறிது
  • பூண்டு                                             - 5 இதழ்
  • உப்பு                                                 - தேவையான அளவு
  • தேங்காய்                                      - சிறிது
  • எண்ணெய்                                   - 200 மில்லி
செய்முறை:-
  • சேப்பங்கிழங்கை நீரில் நன்றாக கழுவி கழுவிய கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு கிழங்கு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக விட வேண்டும்.
  • தோல் உரிக்கும் பதத்தில் வேக வைக்க வேண்டும்.
  • தோல் உரித்த கிழங்கை நீளமாக கட் பண்ண வேண்டும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடான உடன் நறுக்கிய கிழங்கை  போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
  • மிக்சியில் தேங்காய்,இஞ்சி,பூண்டு ,சோம்பு போட்டு அரைக்க வேண்டும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி  சூடான உடன் மிளகாய் பொடி,மஞ்சள் பொடி போட்டு அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர்  உடன் உப்பையும் போட்டு சுண்டும் வரை வதக்க வேண்டும்.
  • வதங்கிய கலவையில் பொன்னிறமாக வறுத்த  கிழங்கை போட்டு நன்றாக பிரட்டி விட்டு கலவை நன்கு சேர்ந்த உடன் இறக்கி வைக்க வேண்டும்.
  • சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.
  • அனைத்து வகை சாதத்திற்கும் இது பொருத்தமானது .
Read More...

வெஜ் நூடுல் ஃப்ரை

10 comments
தேவையான பொருட்கள்:-
  • ரைஸ் நூடுல்                               -1 பாக்கெட்
  • முட்டைகோஸ்                          -  சிறிது
  • காரட்                                               - 1
  • குடை மிளகாய்                           - 1
  • சோயா சாஸ்                               - 2 ஸ்பூன்
  • சில்லி சாஸ்                                - 2 ஸ்பூன்
  • பல்லாரி வெங்காயம்              - 1
  • இஞ்சி ,பூண்டு பேஸ்ட்            - சிறிது
  • சீனி                                                  - 2 ஸ்பூன்
  • ஆலிவ் ஆயில்                           - 2 ஸ்பூன்
  • ஃ ப்ரை பண்ண தேவையான ஆயில்    - சிறிது
செய்முறை:-
  • முதலில் முட்டைகோஸ், காரட், குடை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக  கட் பண்ணி கொள்ள வேண்டும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக்கொண்டு அதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ் கலந்து இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுடன் ஆலிவ் ஆயிலையும் சேர்த்து இறுதியில் சீனியையும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
  • இதை தனியாக பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
  • சுமார் 4 மணி நேரம் கழித்து இந்த கலவை நீர் விட்டிருக்கும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து வேண்டிய ஆயிலை ஊற்றி சூடான உடன் நூடுல்லை உடைக்காமல் அப்படியே முழுதாக போட்டு கோல்டன் கலர் வந்த உடன் ஆயிலை வடித்து மொறு மொறுப்பான நூடுல்லை தனியே எடுக்க வேண்டும்.
  • சாப்பிட பரிமாறுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் பரிமாறும் பவுலில் சிறிது நூடுல்லை வைத்து அதில் பொடியாக நறுக்கிய அனைத்து காய்களையும் சிறிது வைத்து அதன் மேல் வெங்காயம், சோயா, சில்லி சாஸ் கலவையை சேர்த்து நன்றாக பிரட்டி விட்டு பரிமாற எடுத்து வைக்க வேண்டும்.
  • இதில் காய்களை அப்படியே வேக வைக்காமல் சேர்ப்பதால் சத்துக்கள் வீணாகாமல் ஆரோக்கியமான உணவாக சாப்பிடலாம்.
Read More...